இது உண்மை தானா…? இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
8 November 2023, 11:23 am

இது உண்மை தானா…? இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,660 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 45,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 76.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ