ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை… வார இறுதியில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 11:23 am

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை… வார இறுதியில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த சில தினங்களாக மளமளவென உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,790க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,743க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,944க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • Vishal Ready for Marriage Ceremony பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!