கிடுகிடுவென சரிந்த தங்கத்தின் விலை… ஒரே நாளில் ரூ.320 குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 May 2024, 10:11 am
Quick Share

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.6,900க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,800க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.4 கோடி விவகாரம்…. இரு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு சம்மன் ; இன்று நேரில் ஆஜராக உத்தரவு

அதேபோல, வெள்ளியின் விலையும் மளமளவென குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.99 க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,100 குறைந்து ரூ.99,000க்கும் விற்பனையாகி வருகிறது.

Views: - 148

0

0