சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சட்டென குறைவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
28 February 2024, 10:28 am

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சட்டென குறைவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,480 -ஆகவும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?