2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு…!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 10:30 am

2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு…!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,336க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.76.00க்கும், ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • simran sharing her memories of her sister simran 23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!