அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… மீண்டும் சரசரவென உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
10 November 2023, 11:26 am

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… மீண்டும் சரசரவென உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த 4 நாட்களாக சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160க்கும், ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.5,645-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.77000-க்கு விற்பனையாகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!