வரலாறு காணாத புதிய உச்சம்… ஒரே நாளில் ரூ.640 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
Author: Babu Lakshmanan12 April 2024, 11:06 am
வரலாறு காணாத புதிய உச்சம்… ஒரே நாளில் ரூ.640 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: திமுக – பாஜகவினரிடையே மோதல்… கோவையில் பிரச்சாரத்தின் போது பரபரப்பு…!!!
ஆனால், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.500 அதிகரித்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.