வார இறுதியில் கொஞ்சம் அப்செட்… சற்று அதிகரித்த தங்கம் விலை… மளமளவென சரிந்த வெள்ளி விலை!!
Author: Babu Lakshmanan25 May 2024, 10:23 am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
கடந்த இரு தினங்களாக சுமார் 1,680 குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,655க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: கட்சி பெயரை சொல்லி ரூ.1 கோடி வசூலித்த முன்னாள் நிர்வாகி..? கட்சிக்குள் நடந்த நோட்டீஸ் மோதல் ; திண்டுக்கல் பாஜகவில் சலசலப்பு
அதேவேளையில், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.500 சரிந்து ரூ.96,000க்கும் விற்பனையாகி வருகிறது.