ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை… மீண்டும் ரூ.49 ஆயிரத்தை கடந்து விற்பனை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 11:36 am

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை… மீண்டும் ரூ.49 ஆயிரத்தை கடந்து விற்பனை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.1,800 வரை தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது. நேற்று ரூ.320 குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் இன்று சவரனுக்கு ரூ.200 வரை தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 135க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு உயர்ந்து 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!