மீண்டும் ஆட்டத்தை காட்டிய தங்கம் விலை… நேற்று இறங்கிய வேகத்தில் இன்று உச்சம் ; வாடிக்கையாளர்கள் ஷாக்!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 10:49 am

மீண்டும் ஆட்டத்தை காட்டிய தங்கம் விலை… நேற்று இறங்கிய வேகத்தில் இன்று உச்சம்… வாடிக்கையாளர்கள் ஷாக்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: அடுத்தடுத்து தாக்கிய இடி, மின்னல்… பால் கறந்து கொண்டிருந்த பெண் உள்பட 2 பேர் பலி… பசு மாடும் உயிரிழப்பு!

கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.53,800ஆகவும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,725க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்தள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.91க்கும், கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.91 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

  • Vinayakan viral controversy மீண்டும் அலப்பறை செய்த ஜெயிலர் பட வில்லன்…நடவடிக்கை எடுக்குமா கேரளா சினிமா துறை..!