ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 10:17 am

ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை, நேற்று ரூ.520 குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6870க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ‘நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா’…? ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் தாக்கு..!!!

ஆனால், வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.90.50க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!