வார இறுதியில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் கிடுகிடு உயர்வு ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 10:57 am

வார இறுதியில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் கிடுகிடு உயர்வு ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 4,767க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.76.40க்கும், ஒரு கிலோ ரூ.76,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 4538

    0

    0