நேற்று எகிறிய தங்கம் விலை இன்று சரிவு… நகை பிரியர்கள் மகிழ்ச்சி ; சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
8 February 2024, 10:48 am

நேற்று எகிறிய தங்கம் விலை இன்று சரிவு… நகை பிரியர்கள் மகிழ்ச்சி ; சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5840க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6,310க்கும், சவரனுக்கு ரூ.50,480க்கும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 76க்கும், ஒரு கிலோ விலை ரூ.76,000க்கும் விற்பனையாகி வருகிறது

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 2423

    0

    0