இன்று சற்று நிம்மதி அளிக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
Author: Babu Lakshmanan31 May 2024, 11:12 am
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: அணையப் போகும் விளக்கு பிரகாசமகத்தான் எரியும்… ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!!
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,730-க்கும், ஒரு சவரன் ரூ.53,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.65 உயர்ந்து, ரூ.6,720க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.