வார இறுதியில் சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம்… சவரனுக்கு ரூ.160 குறைவு…!!
Author: Babu Lakshmanan11 May 2024, 11:11 am
வார இறுதியில் சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம்… சவரனுக்கு ரூ.160 குறைவு…!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
மேலும் படிக்க: பெண் காவலர்கள் குறித்து அவதூறு… சவுக்கு சங்கரை தொடர்ந்து யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது!!
நேற்று அக்ஷய திருதியை நாளில் 3 முறை விலை அதிகரித்து, ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்தது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.54 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.54 ஆயிரமாகவும், கிராமுக்கு ரூ.20 சரிந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், விற்பனை செய்யப்படுகிறது.