பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.43 ஆயிரம், ரூ.44 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது. இந்த நிலையில், புதிய உச்சமாக தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து 45,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனையானது.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.