வண்டிய எடுக்கறதுக்கு முன்னாடி விலைய தெரிஞ்சுக்கோங்க….? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

Author: Babu Lakshmanan
8 November 2022, 8:08 am

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதன் மூலம், 45வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 22ம் தேதியன்று திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 171வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாயின.

  • Netflix 2025 Tamil movie releases கல்லா கட்டிய நெட்ஃபிளிக்ஸ்…பல மாஸ் படங்களின் OTT உரிமைகளை வாங்கி அசத்தல்…!