WEEK END RIDE போக தயாரா..? அதுக்கு முன்னாடி பெட்ரோல், டீசல் விலையை தெரிஞ்சுக்கோங்க..!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 8:26 am

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 22ம் தேதியன்று திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 42வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 722

    0

    0