சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதன் மூலம், 45வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 22ம் தேதியன்று திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 104வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாயின.
சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…
அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள்…
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…
கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
This website uses cookies.