ஒடும் ரயிலில் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு : வீடியோவை கையில் எடுத்த போலீஸ்… 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்
Author: Babu Lakshmanan27 May 2024, 8:00 pm
ஓடும் ரயிலில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்த போதை இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண். 22639 ஆலப்புழா விரைவு வண்டியில், S-10 பெட்டியில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது, ரயில் ஈரோடு மற்றும் திருப்பூர் இரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது, அந்த பெட்டியில் பயணம் செய்து வந்த இளைஞர்கள் மதுபோதையில் புகை பிடித்து கொண்டும், சத்தமாக அநாகரீகமாக பேசி கொண்டும் சக இரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.
மேலும் படிக்க: அடித்துச் சொல்வேன்…. ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி தான் ; அதிமுகவினருக்கு பட்டியலிட்டு விளக்கிய அண்ணாமலை!!
அதில், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடத்தில் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என கேட்ட மணிகண்டனை அந்த இளைஞர்கள் தரக் குறைவாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கைகளால் தாக்கிவிட்டு ரயில் திருப்பூர் இரயில் நிலையம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இது சம்மந்தமாக மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் மீது திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.
அந்த சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தனலட்சுமி, தலைமையில், உதவி ஆய்வாளர் பாபு, மற்றும் கார்முகில்வானன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆடங்கிய இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் மற்றொருவரை கைது செய்து நீதிமன்றத்தல் ஆஜர்ப்படுத்தி முதல் குற்றவாளியை கோவை சிறையில் அடைத்தனர். இளம் சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் இன்று 27.05.2024″ம் தேதி அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுடலைராஜ், கரன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரவு நேர இரயில்களில் ரோந்து பணிகளை ரயில்வே காவல் துறையினர் அதிகரித்து வருகின்றன.மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24×7 ரயில்வே காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.