ஹாரன் அடித்தும் தண்டவாளத்தை விட்டு விலகாத 3 சிறுவர்கள்.. ரயில் மோதி பயங்கரம்… என்ன காரணம்…?

Author: Babu Lakshmanan
24 October 2023, 2:24 pm

சென்னையில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பியான சுரேஷ், ரவி மற்றும் நண்பன் மஞ்சுநாத் ஆகியோர் பெங்களூரூவில் இருந்து பெற்றோரை பார்க்க சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் தங்களின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, ஆபத்தை உணராமல் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மீது மோதியது. இதில் 3 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அண்ணன், தம்பியான சுரேஷ், ரவி செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். நண்பன் மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர். ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!