பிளாக்கில் லியோ பட டிக்கெட் விற்பனை… சர்ச்சையில் சிக்கிய வெற்றி திரையரங்கு மேலாளர் : வைரலாகும் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 1:51 pm

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கு மேலாளரே லியோ படத்தின் டிக்கெட்டை பிளாகில் அதிகவிலைக்கு விற்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, நடிகர் விஜய், நடிகர் அர்ஜுன், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா போன்ற ஏராளமான நட்சத்திர பட்டாளங்களோடு, லியோ படமானது, அனைத்து திரையரங்குகளிலும் கடந்த 19ம் தேதி திரையிடப்பட்டது.

இந்த நிலையில், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 18ம் தேதி இரவு வரை திரைப்படத்தின் முன்பதிவானது தொடங்கப்படாமல் இருந்தது. திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் அவர்களும், எக்ஸ் வலைதளத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவுதாக பதிவிட்டு இருந்தார்.

கடந்த 18ம் தேதி ஆன்லைனில் வெளியான டிக்கெட் ஒருசில நிமிடங்களில் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், 19ம் தேதி காலை முதல் திரையரங்கு வெளியே கூடுதல் விலைக்கு லியோ டிக்கெட்டை அதிகவிலைக்கு விற்றதும் தெரியவந்தது. இது தொடர்பான புகாரைத் தொடர்ந்து 19ம் தேதி இருவர் கைது செய்யப்பட்டனர். அப்போது திரையரங்கிற்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் சம்பந்தம் இல்லை, என தெரிவித்தனர்.

இந்த நிலையில் வெற்றி திரையரங்கின் மேலாளர் எழில் என்பவரே திரையரங்கிற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதற்காக புரோக்கர்களிடம் கட்டு கட்டாக டிக்கெட் வழங்குவது தெரியவந்தது. திரையரங்கு மேலாளரிடம் இருந்து டிக்கெட்களை பெற்று கொண்ட புரோக்கர்கள், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் வீடியோக்களும் வெளியானது.

திரைப்படத்தை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, திரையரங்க வாசலிலேயே ரூபாய் 2000 முதல் மூன்றாயிரம் வரை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விட்டுக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. திரையரங்கு மேலாளரே லியோ பட டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/878176263?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 380

    0

    0