பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு… ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த மேனேஜருக்கு கையில் காப்பு…!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 6:06 pm

சென்னை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகரில் இயங்கி வரக்கூடிய மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருபவர் ராஜா (42). அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக (24) பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இளம்பெண் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, ராஜா திடீரென இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு, பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்த இளம்பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்துறையிடம் இரண்டு நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அயனாவரத்தை சேர்ந்த மேனேஜர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…