சென்னிமலை கோயில் விவகாரம்.. மதக் கலவரம் பின்னணியில் யார் : பகிரங்க மன்னிப்பு கேட்ட பாதிரியார்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 9:13 pm

சென்னிமலை கோயில் விவகாரம்.. மதக் கலவரம் பின்னணியில் யார் : பகிரங்க மன்னிப்பு கேட்ட பாதிரியார்..!!!

சென்னிமலையையை ஏசு மலை அல்லது ஜீசஸ்/ கல்வாரி மலை என பெயர் மாற்ற செய்ய வேண்டும் என கிறிஸ்துவ முன்னணியின் கோரிக்கை விடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணி ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் சென்னிமலையில் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாதிரியார் குணசேகரன் சாமுவேல் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சென்னிமலையின் பெயர் மாற்றக் கோரிக்கையை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அதே வீடியோவில் பாதிரியார் குணசேகரன், கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் “வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன்” என மற்றொரு குண்டையும் வீசியுள்ளார்.
அதேபோல “வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

அதாவது கிறிஸ்தவ முன்னணி என்பது யாருடைய அமைப்பு ? கிறிஸ்தவ முன்னணியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது; ஆகையால் தமிழ்நாடு அரசு விரைந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?