கோவை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி : பாரம்பரிய இசை முழக்கங்களுடன் வரவேற்ற ஆட்சியர்… அமைச்சர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2022, 9:33 am
கோவை பந்தய சாலையில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகே செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் தொடங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் 44 வது செஸ் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி கோவை வந்ததடைந்ததை தொடர்ந்து இந்த ஜோதிக்கு இசை முழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டுள்ளது.
கொடிசியா வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்து ஜோதியை கிராண்ட் மாஸ்டர்களிடம் வழங்க உள்ளனர்.
இதற்கு முன்னர் அந்த ஜோதி பந்தய சாலை பகுதியில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகில் இருந்து கொடிசியா நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் துவங்கி அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைகிறது. இந்த ஓட்டத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்கும் வகையில் பாரம்பரிய கலைகள், இசை முழக்கங்கள் முழங்க எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உட்பட கோவை மேயர் கல்பனா, துணை மேயர் ,செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.