தமிழகம்

சிக்கன் ரைஸால் வந்த வினை.. 3 பேர் துடிதுடித்த அந்த நொடி!

ஈரோடு அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகர் – அமுதா தம்பதி. இவர்களது மகள் நீலாம்பரி. இந்த நிலையில், திடீரென இவர்கள் 3 பேரும், நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரணம் கேட்டதற்கு, கடுமையான வயிற்று வலி எனக் கூறி உள்ளனர். பின்னர், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு, கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஹோட்டலில் ‘சிக்கன் ரைஸ்’ வாங்கி, 3 பேரும் பகிர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.

பின்னர், மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாகவும், 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்பதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறி உள்ளனர்.

மேலும், இது குறித்து மருத்துவர்கள் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருங்கல்பாளையத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை நடத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அப்போது, அங்கு உணவக சமையல் அறை சுகாதாரம் அற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த ஹோட்டல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாமல் இயங்கியதும், இறைச்சி மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, கழிவு எண்ணெய் தொடர்பான நடைமுறைகள், உணவு கையாள்வதற்கான மருத்துவ தகுதிச் சான்று என்ற எந்த முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!

கடலூரில் கடந்த 2014ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில்…

18 minutes ago

4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!

ஆஸ்காருக்காக நான்காவது குழந்தை! விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

45 minutes ago

மகளின் தோழிகளைப் பார்க்க ஆசைப்பட்ட தந்தை.. டாக்ஸி டிரைவர் சிறை சென்ற பகீர் பின்னணி!

கேரளாவில், தனது வளர்ப்பு மகளின் தோழிகளையும் பாலியல் அத்துமீறலுக்கு அழைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம்,…

57 minutes ago

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத.. கூட்டணி கணக்கு? இபிஎஸ் கடும் விமர்சனம்!

எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: தமிழக…

2 hours ago

நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!

சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரகாஷ்ராஜ்.! தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா,சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள்…

3 hours ago

ஸ்டேட்டஸ் அரிப்புக்காக ரூ.100 கோடியில் வீடு.. நயன்தாராவின் பணத் திமிர் : பிரபலம் கொந்தளிப்பு!

நயன்தாரா ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியது குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா கடுமையா விமர்சித்துள்ளார். இது குறித்து…

3 hours ago

This website uses cookies.