ரயிலில் ஆர்டர் போட்ட சிக்கன் ரைஸ்.. கோவை இளம் வீராங்கனை பலி!

Author: Hariharasudhan
18 November 2024, 6:14 pm

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: கோவையைச் சேர்ந்தவர் எலினா லாரேட். 15 வயதான இவர், கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து உள்ளார்.

பின்னர், அங்கு இருந்து ரயில் மூலம் குவாலியர் சென்றார். தொடர்ந்து, அங்கு போட்டியில் பங்கேற்றுவிட்டு, ரயில் மூலம் மீண்டும் கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னை திரும்பி உள்ளார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற எலினா, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக மிகவும் சோர்வுடன் கூறியுள்ளார்.

எனவே, உடனடியாக எலினாவை பெரியமேடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று உள்ளானர். ஆனால், எலினா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

FOODS IN TRAIN

இந்த விசாரணையின்போது, ரயில் பயணத்திற்குப் பிறகே இவ்வாறு எலினா உயிரிழந்து இருப்பதால், ரயிலில் அவருடன் பயணித்த சக மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. அப்போது ரயிலில் வரும்போது சிக்கன் ரைஸ், பர்கர் மற்றும் பீட்சா ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து மாணவிகள் அனைவரும் சாப்பிட்டது தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

எனவே, சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால், அதனால் ஏற்பட்ட உடற்கோளாறால் மாணவி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது தனியார் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்தால், நமது கோச் அருகே குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • kalakalappu 3 movie update குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!
  • Views: - 50

    0

    0

    Leave a Reply