சிதம்பரம் நடராஜர் கோவில் குதிரையை துன்புறுத்தும் ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 டிசம்பர் 2022, 9:44 மணி
Chidambaram Temple Horse - Updatenews360
Quick Share

சிதம்பரம் நடராஜர் கோவில் குதிரை துன்புறுத்தவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் பொதுமக்கள் நன்கொடையாக பசுமாடுகள் கன்றுக்குட்டிகள் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கோயில் தற்போது 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் அஸ்வா பூஜைக்கு பயன்படுத்துவதாக ஒரு குதிரை உள்ளது இந்தக் குதிரையை ஜாக்கி என்பவர் பராமரித்து வருகிறார்.

குறிப்பாக நடராஜர் கோயிலில் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ராஜா குதிரையை இரவு நேரங்களில் குதிரையை பராமரிப்பு செய்து வரும் ஊழியர் துன்புறுத்தி ரேஸிங் பயிற்சி செய்வதாக தற்போது பல்வேறு சமூக வலைத்தளங்களில் காணொளி வைரலாக பரவி வருகிறது.

இது சம்பந்தமாக கோயில் நிர்வாகம் குதிரையை பராமரிப்பு செய்து செய்து வரும் ஊழியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் செல்வது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கோயில் நிர்வாகம் பூஜை செய்யும் குதிரையை துன்புறுத்தி வரும் ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர் மத்தியில் கோரிக்கையாக எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர் வெங்கடேசனை கேட்ட பொழுது குதிரையை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு ஒரே இடத்தில் கட்டி வைக்க முடியாது.

https://vimeo.com/782588551

அதற்கு போதிய பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்காக குதிரையை சில பயிற்சிகள் கொடுக்கப்படுவது வழக்கம். அதனால் தற்போது சமூக வலைதளங்களில் குதிரையை தாக்குவதாக தேவையற்ற வதந்திகளை நடராஜர் ஆலயத்தின் மீது தீட்சிதர்கள் மீது பழி சுமக்கின்றனர் என தெரிவித்தார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 520

    0

    0