ரூ.19.64 கோடியில் புதிய திறந்தவெளி விளையாட்டு மைதானம்: காணொளி காட்சி திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Rajesh
14 March 2022, 7:09 pm

வேலூர்: காட்பாடியில் விளையாட்டு மைதானத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சுமார் 36.68 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய திறந்தவெளி விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காட்பாடியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!