கர்நாடகாவில் உள்ள சொத்துக்கள் போய்விடுமே என்ற பயத்தில் முதலமைச்சர் உள்ளார் : சி.வி சண்முகம் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 8:50 am

கர்நாடகாவில் உள்ள சொத்துக்கள் போய்விடுமே என்ற பயத்தில் முதலமைச்சர் உள்ளார் : சி.வி சண்முகம் குற்றச்சாட்டு!!

திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதராமாக உள்ள காவிரி நீர் திறந்துவிடக்கோரி தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது காவிரி நீர் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகினாலும் மறைமுகமாக ஆதரவளிப்பாக அமைச்சர் ரகுபதி தெரிவிக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால் கூட்டணியில் இருக்கும் அரசுக்கு எதிராக செயல்பட்டு 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது தான் அதிமுக அரசு உறுப்பினர்கள் அதை ஏன் திமுக உறுப்பினர்கள் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.

காவிரி நீர், முல்லை பெரியாரு, கச்சத்தீவு போன்றவைகளில் சொந்த பிரச்சனைகளுக்காக விட்டு கொடுத்த திமுக தான் அரசு என்றும்
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கர்நாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என கூறுகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அளித்த தீர்ப்பினையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடக முதலமைச்சர் செயல்படும்போது காவிரி நீர் விவகாரம் குறித்து பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசாமல் ஸ்டாலின் தயக்கம் காட்டினார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ள துணிவு தமிழக முதலமைச்சருக்கு இல்லை ஏனென்றால் கொள்ளையடித்த பணம் எல்லாம் கர்நாடகவில் சொத்துக்களாக இருப்பதால் தான் அவருக்கு துணிவு இல்லை என கூறினார்.

காவிரி நீர் விவகாரத்தில் காலம் கடந்தும் சட்டமன்ற கூட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டதால் அதனை நம்பி விவசாயம் செய்த டெல்டா விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளதாகவும், நீர் திறப்பினை நம்பி பயிர் செய்த மூன்று லட்சம் விவசாய ஏக்கர் நிலம்கருகியதால் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக முதலமைச்சர் இழைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

நெல் கருகியதால் ஒரு விவசாயி உயிரிழப்பிற்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை இழப்பீடும் வழங்கவில்லை என சிவி சண்முகம் குற்றச்சாட்டினார்.

காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் காவிரி நீர் விவகாரத்தில் ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பேச ஏன் தமிழக அரசு தயக்கம் காட்டுவதாகவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை பார்க்க சென்ற துரைமுருகனும் டி ஆர் பாலுவும் ஒரு வார்த்தை கூட அமைச்சரிடம் பேசவில்லை அவருடன் சென்றவர்கள் தான் பேசியதாக தெரிவித்தார்.

கர்நாடக அரசை வண்மையாக கண்டிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்ற தைரியம் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்றத்தில் ஏன் காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை திமுக அரசு தொடரவில்லை என்றும் ஊழல் செய்த அமைச்சரை காப்பாற்ற துடிக்கும் திமுக அரசு ஏன் விவசாயிகள் மீது அக்கறை கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 504

    0

    0