முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலரஞ்சலி..!!

Author: Rajesh
1 March 2022, 9:22 am

சென்னை: தனது 69வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனது பிறந்த நாளை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எளிமையாக கொண்டாடுங்கள் என்று அவர் கேட்டு கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். இதனையடுத்து, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தாயிடம் ஆசி வாங்கினார்.

மேலும், தனது அண்டை வீட்டாரையும் சந்தித்து பிறந்தநாள் ஆசி பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!