குழந்தைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்.. அதுவும் ‘தாமரை’ தான் ஹைலைட்!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 12:47 pm
தூத்துக்குடி விமான நிலையத்தில் குழந்தைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பெயர் சூட்டியதால் தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று திறந்து வைத்தார்..
இதையும் படியுங்க: சாத்தான்குளம் பேச்சி வீட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை.. போலீசார் விசாரணை!
இந்த நிலையில், நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

அப்போது அங்கு நெல்லை, மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த திமுக பேரூராட்சி செயலாளர் முருகையா பாண்டியன்-சிதம்பர வடிவு தம்பதியினர் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதல்வர் அக்குழந்தைக்கு செந்தாமரை என்று பெயர் சூட்டினார்.

இது குறித்து தம்பதிகள்கள் கூறுகையில், தமிழக முதல்வர் என் குழந்தைக்கு செந்தாமரை என்று பெயர் சூட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. தமிழக முதல்வர் பெயர் சூட்ட வேண்டும் என்று பல நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்றனர்.