திருச்சி : டாக்டர் கிருஷ்ணசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் ஸ்டாலின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாழையூர் குணா, கடந்த 23ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்றைய தேவை திராவிட மாடலா, தேசிய மாடலா என்ற ஒரு விவாதம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேசிய மாடல் என்ற தலைப்பில் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது இமானுவேல் சேகரன் கொலைச் சம்பவம் மற்றும் வெண்மணி சம்பவத்தைக் குறித்து திராவிட கட்சிகள் என்ன செய்தீர்கள், மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டம் போது திமுக என்ன செய்தது, திமுக சமூகநீதி பேச என்ன அருகதை இருக்கிறது, தமிழகத்தில் நடந்த அத்தனை மனித உரிமை மீறல்களின் போது திமுக என்ன செய்தது என்ன சமூக நீதி என்ற நாடகத்தை, பொம்மலாட்டத்தை புதிய தமிழகம் கண்டிக்கிறோம் என்று பேசும்போது கருத்துக்கு கருத்து தெரிவிக்காமல் ஸ்டாலினுடைய ரவுடி ஆட்சியில் ரவுடிகளை ஏவி ஆயிரம் விளக்கு பகுதியை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
கிருஷ்ணசாமி பேசும்போது கூச்சலிட்ட திராவிட மாடலை சேர்ந்த ரவுடிகள் கைது செய்யும் வரையில் முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை வலியுறுத்தி இன்று ஸ்டாலினுடைய உருவ பொம்மையை எரித்து புதிய தமிழகம் கண்டனத்தை பதிவு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.