தாய் மாமாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாமாவிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்ற தமிழக முதல்வர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அடுத்துள்ள கோவில் திருமாளம் கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி வீடு அமைந்துள்ளது.
இவரது மருமகள் உமாவும் இவரும் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவருக்கு 100 ஆவது பிறந்தநாள் கண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சீர்காழிக்கு வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் திருமாளம் கிராமத்திற்கு வருகை தந்து தாய் மாமாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரிடம் முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, மெய்யநாதன், எ.வா. வேலு உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமாவிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.
அதனை தொடர்ந்து வீட்டில் தேநீர் அருந்திவிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் சாலை வழியாக சென்னை புறப்பட்டார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.