கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 November 2023, 3:53 pm
கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
திருவெண்ணைநல்லூர் காந்தி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நிழல் கூட்டத்தையும் அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூரில் இருந்து சித்தலிங்க மடம், திருவெண்ணெய்நல்லூர் வழியாக சென்னைக்கு புதிய பேருந்தையும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
மேலும் திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூர் வழியாக அருமலை ஊராட்சி வரை புதியதாக நகரப் பேருந்து இயக்கப்பட்டது. அதனையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இன்றைக்கு தமிழகத்தில் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதம் கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நடைபெற்ற தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழேந்தி எம்எல்ஏ மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், மாவட்ட கவுன்சிலர் பிரபு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.