அவரே TARGET போடுவாரு.. அதை அவரே செய்வாரு : கோவை பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 8:06 pm

கோவை சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை கருத்தம்பட்டியில் விசைத்தறி நெசவுத்தறி சங்கங்களின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- ஆடை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை கடமையாக நினைக்கிறேன். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவிகள் செய்யபப்ட்ட்டு வருகிறது. நெசவாளர்களுக்கு பல திட்டங்களை கேட்காமலயே செய்கிறோம். கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்பனை செய்த இயக்கம் திமுக. மின் கட்டண சலுகையால் கூடுதல் செலவு சென்ற போதிலும் நெசவுத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

தனக்கான் டார்கெட்டை அவரே உருவாக்கி அதை செய்து முடிப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை நான் டார்கெட் அமைச்சர் என்று தான்சொல்லுவேன்.. கட்சிக்காக இருந்தாலும் சரி ஆட்சிக்காக இருந்தாலும் அதை செய்வார்.

கடந்த 10 வருடமா ஆட்சி செய்த கட்சி, 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகளைத்தான் வழங்கியிருந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் இது கலைஞருடைய முழக்கம், சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய வழக்கம் என பேசினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 377

    0

    0