மணல் கொள்ளையில் தொடர்பா? அமைச்சர் வீட்டில் பணத்தை கொட்டும் மணல் கொள்ளையர்கள்? வைரலாகும் சர்ச்சை ஆடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2023, 7:31 pm
மணல் கொள்ளையில் தொடர்பா? அமைச்சர் வீட்டில் பணத்தை கொட்டும் மணல் கொள்ளையர்கள்? வைரலாகும் சர்ச்சை ஆடியோ!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக அய்யலூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர் கருப்பணன். இவர் தலைமையில் அய்யலூர் முழுவதும் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பணனின் தம்பி மகன் தீனதயாளன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில் எத்தனை சட்டம் போட்டாலும் அரசியல்வாதி போடுகிற சட்டம் தான் ஜெயிக்கும்.
இவ்வளவு பேசுகிறாரே ஸ்டாலின் மணல் கொள்ளையை பற்றி மட்டும் பேச மாட்டார் ஏனென்றால் அந்த அளவுக்கு அவருக்கு வருமானம் இங்கிருந்து போகிறது.
பலர் வீடியோக்கள் எடுத்து போட்டாலும் மணல் கொள்ளை நிறுத்த முடியாது. இங்கே அள்ளுவதை நிறுத்திவிட்டால் உடனே முக்கரை பிள்ளையார் கோயில் அருகே தற்போது மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
மணல் கொள்ளையை கவியோவியத் தமிழன் என்பவர் நிறுத்தலாம் என்று வீடியோ போட்டாலும் அதற்கு பயமில்லை நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது என்று போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் என்ன ஐம்பது ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்கிறார்களா என்று நக்கல் பேச்சும் பேசி அடுத்து வெட்டு தான் விழுகபோகிறது. அவருக்கு சுத்து போட்டு விட்டார்கள் அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்றும் மிரட்டும் தோரணையில் பேசினார்.
வி.சி.ராஜேந்திரன்(திமுக விவசாய அணி துணை அமைப்பாளர்) என்பவர் ஐ.பெரியசாமியின் வலது கையாக இருந்து வருகிறார். அதனால் தான் வி.சி.ராஜேந்திரனுக்கு மணல் அள்ள இலவச சீட்டு வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
அவர் ஐ. பெரியசாமியின் வீட்டிலேயே தான் இருக்கிறார் தினமும் மாலையில் பணத்தை ஐ.பெரியசாமி வீட்டில் கொட்டுகிறார் என்று பேரூராட்சி தலைவரின் தம்பி மகனே திமுக அரசை கழுவி கழுவி ஊத்தும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தீனதயாளன் சொல்வதைப் பார்த்தால் மணல் கொள்ளையை பற்றி ஸ்டாலின் பேசாமல் இருப்பதற்கு காரணம் வருமானம் அதிகமாக செல்வதால் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது