’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!
Author: Hariharasudhan28 January 2025, 7:14 pm
சேலத்தில் தனிமையில் இருப்பதற்கு தடையாக இருந்த குழந்தையை கள்ளக்காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: சேலம் மாநகர் அடுத்த குகை என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பசுபதி (26) – சண்முகப்பிரியா (25) தம்பதி. இதில், பசுபதி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்க் வெற்றிவேல் (6) மற்றும் வெற்றிமாறன் (3) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், சண்முகப்பிரியாவுக்கும், பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியுள்ளது. பின்னர், சண்முகப்பிரியா தனது கணவரை விட்டு, இரண்டு குழந்தைகளுடன் தமிழரசனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது, குழந்தை வெற்றிமாறன் அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், சிறுவனை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: Chocos சாப்பிட்ட குழந்தையின் வாயில் ஊர்ந்த புழு… பெற்றோர் அதிர்ச்சி!
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.