வெற்றி தரும் விஜயதசமி திருநாளில் கோவை சித்தாபுதூர் கோவிலில் வித்யாரம்பம் : அரிசியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2022, 10:39 am
விஜயதசமி தினத்தன்று குழந்தைகள கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
இதன் ஓரு பகுதியாக கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது .
குழந்தைகளின் விரலை பிடித்து ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா என எழுதியும் பச்சரியில் ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை இன்று துவங்கினர்.
இன்றைய தினம் கல்வியை துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோவிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.