குழந்தைகள் பயிலும் அங்கன்வாடியில் குடி, கும்மாளம் : சிக்கிய திமுக பிரமுகரின் மகன்.. ஆவேஷம் பட பாடலுக்கு ஆட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 10:08 pm

குழந்தைகள் பயிலும் அங்கன்வாடியில் குடி, கும்மாளம் : சிக்கிய திமுக பிரமுகரின் மகன்.. ஆவேஷம் பட பாடலுக்கு ஆட்டம்!

தி.மு.க-வில், வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா, வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார்.

இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து, வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் `அங்கன்வாடி’ மையத்துக்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து, பட்டாக் கத்திகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தில் வரும் `இலுமினாட்டி’ பாடலுக்கு ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர். அங்கன்வாடி மையத்தில் இளைஞர்களை சேர்த்துக்கொண்டு தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ காட்சிகள் வேலூர் பகுதியில் வைரலாகி, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க: என்னை பற்றி விமர்சனம் செய்தவர்.. சவுக்கு சங்கரை கைது செய்தது தப்பில்லை..கையை உடைத்தது தப்பு!!

இது குறித்து சரணின் தந்தையும், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது, அந்த அங்கன்வாடி மையம் சேதாரமாக உள்ளது, ரூ.4.96 லட்சத்துக்கு டெண்டர் விட்டு கழிவறை வசதியுடன் அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்கும் வேலையும் தொடங்கப்பட்டிருக்கிறது.

பழைய கட்டடம் என்பதால் தனது மகன் ரீல்ஸ் வீடியோ எடுத்து போட்டிருக்கிறார். சினிமாவிலும், ஷார்ட் ஃபிலிமிலும் நடிக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கடந்த 2 ஆண்டுகளாக இப்படித்தான் சின்னச்சின்னதாக ரீல்ஸ் எடுத்து போடுகிறார். இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என அலட்சியமாக கூறியுள்ளார்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!