திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக ஏழு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர்.
இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் குளிப்பதற்காக நீரில் இறங்கி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றாலும் ஆழமான சேற்றில் சிக்கி உள்ளனர.
நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் புதை குழி பகுதியான சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்பது தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் மற்ற ஐந்து மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த இரண்டு பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தது சிட்கோ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.