சீனாவா? திருச்செந்தூரா? அரசு பேருந்து வழித்தட பலகையில் சீன மொழி… பயணிகள் குழப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 8:14 pm
Madurai China
Quick Share

சீனாவா? திருச்செந்தூரா? அரசு பேருந்து வழித்தட பலகையில் சீன மொழி… பயணிகள் குழப்பம்!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருச்செந்தூருக்கு தற்காலிக ஓட்டுனரை கொண்டு இயக்கப்பட்ட அரசு பேருந்தி்ல் சீன மொழி போன்று பெயர்பலகை இருந்ததால் குழப்பமடைந்த பயணிகள்

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாட்களாக பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை பொருத்தம்பட்டில் நேற்றைய தினம் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இன்றைய தினம் 95 சதவீத அரசு பேருந்துகள் மாற்று ஓட்டுனர்களை வைத்து இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகம், அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் உட்பட மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் திருச்செந்தூர் செல்லக்கூடிய பேருந்து ஒன்றில் மாற்று பணியாளர்கள் வைத்து இயக்கப்பட்டு இருந்தது அதில் பேருந்தின் பெயர் பலகையில் சீன மொழி போன்ற அறிவிப்பு பலகை இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

மேலும் சீன மொழி போன்ற விளம்பர பலகையோடு மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 415

    0

    0