விக்ரம் படம் அடைந்த மாஸ் வெற்றி, கமல்ஹாசனை பாராட்டிய பிரபல முன்னணி நடிகர்- வெளிவந்த புகைப்படங்கள்..!

Author: Rajesh
12 June 2022, 10:27 am

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் வசூலுக்கு எந்த குறையும் இல்லை, பல இடங்களில் இதுவரை சாதனை லிஸ்டில் இருந்த படங்களின் வசூலை கூட விக்ரம் முறியடித்து வருகிறது.

படம ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்த படமாக அமைய அவர்கள் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்தார்கள். அதன்பிறகு படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ஒரு வாட்ச் கொடுத்தார்கள்.

நேற்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவினின் வீட்டிற்கு செல்ல கமல்ஹாசனுக்கு விக்ரம் பட வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது. சிரஞ்சீவி பட வெற்றிக்காக கமல்ஹாசனை மனதார பாராட்டியுள்ளார். அவர்களுடன் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருந்துள்ளனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!