“கோவிந்தா… கோவிந்தா…” திருப்பதியில் சிரஞ்சீவி தரிசனம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு..!
Author: Vignesh22 August 2024, 10:37 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிறந்தநாளையொட்டி சாமி தரிசனம் செய்தார் நடிகர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்.
தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டாரும் முன்னாள் மத்திய அமைச்சர் பத்மபூஷன் நடிகர் சிரஞ்சீவிக்கு 69 வது இன்று பிறந்தநாள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தார். ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனசேனா கட்சி திருப்பதி எம்.எல்.ஏ ஆரணி சீனிவாசலு வரவேற்று திருமலைக்கு அழைத்துச் சென்றார்.
விமான நிலையத்தில் சிரஞ்சீவியைகான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். திருமலையில் டி.எஸ்.பி. விஜயசேகர், துணை செயல் அதிகாரி பாஸ்கர் வரவேற்றனர். இதனையடுத்து திருமலையில் வெங்கடேஸ்வரா நிலையல் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
இன்று காலை குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்தனர்.