ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஓபிஎஸ் : 2600 நபர்களால் ஒன்றும் செய்ய முடியாது.. வைத்திலிங்கம் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 5:14 pm

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொதுக்குழு குறித்து நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்ப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை 2,600 நபர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…