ஹவுஸ்ஃபுல் ஆகலையா…? உடனே மாத்தி யோசித்த தியேட்டர் மேனஜர்… ரூ.90 லட்சம் மோசடி ; 7 பேர் கைது..!!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 9:30 am

சேலத்தில் சினிமா திரையரங்கில் போலி டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனை செய்து, பணமோசடியில் ஈடுபட்ட திரையரங்க மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல சினிமா தியேட்டர் பங்குதாரர் கீதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று கொடுத்தார். அதில் தியேட்டரில் பணியாற்றிய மேலாளர் கண்ணன் உள்பட சிலர் ஒன்றாக சேர்ந்து தியேட்டரில் ‘ஹவுஸ்புல்” ஆகாத நாட்களில், ஏற்கனவே விற்பனையான டிக்கெட்டுகளை அதே எண்ணுடன் பொய்யாக மறு டிக்கெட்டுகள் அச்சடித்துள்ளனர்.

பின்னர் மறுஅச்சடிப்பு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக கணக்கு எழுதி அவர்களுடைய சொந்த உபயோகத்திற்கு எடுத்து கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை டிக்கெட்டுகள் மூலம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு,மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சினிமா தியேட்டர் மேலாளர் கண்ணன் (வயது 39), புக்கிங் ஆபரேட்டர்கள் வெங்கடாசலம் (32), முருகன் (33), ஏழுமலை (26) ஆகியோர் இரண்டு பெண்கள் மற்றும் மொத்தம் 7 பேர் டிக்கெட்டுகளை மறு பிரிண்டு செய்து விற்று ரூ.96 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 467

    0

    0