ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் திடீர் மரணம் : திரையுலகத்தினர் இரங்கல்!!
தமிழ் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர். விட்டல். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் படங்களில் பணியாற்றி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, கழுகு உள்ளிட்ட 35 திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார்.இதுதவிர, அவர் 5 படங்களை இயக்கியுள்ளார். 3 படங்களை தயாரித்தும் உள்ளார்.
இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். இவர்களது, கூட்டணியில் 70 திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
இது மட்டுமின்றி, தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்தமாக 300 படங்களுக்கும் கூடுதலாக, படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.