சத்தமில்லாமல் வட்டமடிக்கும் ட்ரோன்கள்… பழனி மலையில் பரபரப்பு : அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 7:12 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அனுமதியின்றி எல்லை மீறி பறக்கவிடப்படும் ஹெலிகேம் எனும் டிரோன் கேமராக்களின் பயன்பாடுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் கோவில்கள், இயற்கை காட் சிகள், வனப்பகுதிகள், அணைகள் போன்வற்றை உயரத்தில் இருந்தபடியே காட்சிப்படுத்தும் இந்த டிரோன் கேமராக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்று வரு கிறது.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிக வியூஸ் லைக்குகள் பெறுவதற்காக இளைஞர் கள் அதிதொழில்நுட்ப கேமராக்கள் மூலம் காட் சிகளை படம் பிடித்து வருகின்றனர்.

இதில் ஹெலிகேம் எனும் ட்ரோன் கேமராக்களின் பயன்பாடுகள் அதிகரித் துள்ளது. கல்யாணம், காது குத்து தொடங்கி கோயில் திருவிழாக்கள் வரை இந்த டிரோன் கேமராக்கள் பயன் படுத்தப்படாத இடமே இல்லை , ஆனால் இதற்கென அனுமதி உள்ளிட்ட எந்த வித கட்டுப்பாடுகளும் இது வரை இல்லை. கண்ட இடத்தில் கேமராக்கள் கண்ணிற்கு எட்டாத தூரத்தில் பல விஷயங்களை காட்சிப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக மிகப் பழமையான புராதான கோவிலான பழனி முரு கன் கோயில் மலையை சுற்றிலும் அதிகளவில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனை பயன்படுத்தி புராதான கோயில் என்பதால் சமூக விரோதிகள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தினால் யார் பொறுப்பு என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோயில் கோபுர கலசங்களை நெருங்கும் வகையிலும் , ரோப்காரை நோக்கி ட்ரோன் கேமிராக்கள் பறப்பது போலவும் , கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாறு வனப்பகுதியில் யானை கூட்டமாக இருந்தது.

இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவில் படம் பிடித்து அப்போது யானை கூட்டம் மிரளுவது போலவும் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது இதனை வீடியோ எடுத்து வெளியிட்ட அந்த இளைஞரை வனத்துறையினர் அழைத்து கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர்கள் எங்கிருந்து இயக்குகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியவில்லை. அதேபோல்தான் தான் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் சூழலும்நடவடிக்கை தேவை.

சமூக வலைதளங்களில் பதி விட்டு அதிக வியூஸ் கிடைக்க வேண்டும் என இவ்வாறு செயல் படுகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 262

    0

    0