வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்… 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்த தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 9:41 pm

வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்… 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்த தமிழக அரசு!!

கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், இன்னும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப 2 நாட்கள் ஆகும் என்பதாலும் நாளை நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய தேவை பொருட்களான மருந்து மற்றும் பால் சேவைகளுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?