சென்டர் மீடியனில் யோகாசனம்…நடுரோட்டில் அரபிக்குத்து டான்ஸ்: குடிமகன்களால் நொந்து கொள்ளும் மதுரை மக்கள்..!!
Author: Rajesh18 May 2022, 4:48 pm
மதுரை: நடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு போதையில் வாகனங்களை மறித்து நடனமாடிய ஆசாமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையான மேல வெளி வீதியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலையாக உள்ள சாலையின் மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மது போதையில் இருந்த ஆசாமி சாவாசனம் செய்தவாறு கை கால்களை நீட்டி சாவகாசமாக படுத்து உறங்கி உள்ளார்.
இரண்டு புறச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே உயிருக்கு ஆபத்தான வகையிலும், தூக்கத்தில் புரண்டு சாலையில் விழும் நிலையில் இருந்த நபர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கையே யோகாசனம் செய்வது போல் படுத்து இருந்த நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை திலகர் திடல் போலீசார் பாதுகாப்பு கருதி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அந்த நபரை எழுப்பினர்.
தொடர்ந்து முடித்துக் கொண்ட அந்த நபர் போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி சாலையை விடுத்து அவரிடம் பேச்சு கொடுத்தவாறு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அதேபகுதியில் மற்றொரு போதை ஆசாமி ஒருவர் உச்சகட்ட மதுபோதையில் தள்ளாடியபடியே வந்த நபர் திடீரென சாலையில் நின்று அரபி குத்து பாடல் பாடியவாறு நடனங்கள் ஆடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தவாறு இருந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.